எழுத்துருவாக்கம் ஜான் நாராயண் பராஜூலி மற்றும் சவணி ஜெயசூரியா
கொழும்பு, இலங்கை _ கோவிட் -19 பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மார்ச் 20 அன்று இலங்கை அரசாங்கம் உடனடியாக முழு தனிமைப்படுத்தல் (Lockdown) மற்றும் ஊரடங்கு உத்தரவுகளை அறிவித்தபோது ரோய் கெவின் அலோசியஸ் தனது வேலையை இழப்பதைப் பற்றி கவலைப்பட்டார்.
‘’எனது முழு குடும்பமும் என்னிலேயே தங்கியுள்ளது’’ என ‘பிக்மீ’ இல் ஓட்டுநராக பணிபுரியும் அலோசியஸ் கூறினார். ‘பிக்மீ’ ஆனது இலங்கையின் முதல் இணையவழிப் பிரயாண வசதி ஸ்மார்ட்போன் செயலியாகும் (அப்). அத்தோடு இந்த சேவையானது வண்டி ஓட்டுநர்களையும் பயணிகளையும் உடனடியாகவே இணைக்கிறது. ‘’ஆனால் சில நாட்களுக்குள், அவசர விநியோக சேவை மூலம் வீடுகளுக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு சேர்ப்பதற்காக பிக்மீ ஆனது ஓட்டுனர்களை தேடிக்கொண்டிருப்பதாக எனக்கு தலைமை அலுவலகத்திலிருந்து தகவல் கிடைக்கப்பெற்றது’’ என அவர் குறிப்பிட்டார்.
ஊரடங்கு உத்தரவின் விளைவாக பிக்மியின் வழக்கமான வாடிக்கையாளர்களின் சவாரி மற்றும் உணவு விநியோகத்திற்கான வழக்கமான கேள்வியானது ஒரு முடிவுக்கு வந்தது. ஆனால் அலோசியஸ் அதிஷ்டவசமாக அவர் வேலையை இழக்கவில்லை: அவரும் மற்றவர்களும் அவசரகால விநியோக துரித சேவைக்கு சேர்க்கப்பட்டனர்.
முழு தனிமைப்படுத்தலின் (Lockdown) கீழ் பலருக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க ஒப்புக் கொண்ட இலங்கையின் முதல் நிறுவனங்களில் ஒன்றாக பிக்மீ காணப்படுகின்றது, மேலும் இது சரியான சமூக இடைவெளியிணைப் பேணல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளித்தது.
முதல் வாரத்தில், நிறுவனம் 1,000 க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களை அணிதிரட்டி சமையல் எரிவாயு சிலிண்டர்கள் முதல் அத்தியாவசிய உணவுப் பொதிகள் வரையான பொருட்களை கொண்டதாக 7,000 க்கும் மேற்பட்ட விநியோகங்களைச் செய்தது. மற்றும் அவசரகால தொடர்பொன்றினை (ஹோட்லயின்) விரைவாக அமைப்பதன் மூலம், வைத்தியசாலைக்கு செல்லத் தேவையான மருத்துவ ஊழியர்களின் தேவைகளையும் பிக்மீயினால் பூர்த்தி செய்ய முடிந்தது.
PickMe நாடு முடக்கப்பட்ட முதலாவது வாரத்தில் 7,000 இற்குமதிகமான விநியோகப் பயணங்களை மேற்கொள்வதற்காக, 1,000 இற்குமதிகமான சாரதியினரை அணிதிரட்டியது.
பிக்மீ இன் வணிக மாதிரியும் தொழில்நுட்பத்தின் பயன்பாடும் ஒரு சவாரி சேவையிலிருந்து விநியோக சேவை நிறுவனமாக ஒரே இரவில் முன்னிலைப்படுத்த நிறுவனத்திற்கு உதவியது. ஆரம்பத்தில் இலங்கையின் வணிக தலைநகரான கொழும்புடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்த அதன் சேவைகள் இப்போது நாடு முழுவதும் பல பகுதிகளுக்கு விரிவடைந்துள்ளன.
தொழில்முனைவாளரான ஜூல்ஃபர் ஜிஃப்ரி என்பவரால் 2015 இல் நிறுவப்பட்ட பிக்மீயானது இலங்கையில் சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம்( ஐ.எஃப்.சி) ஆதரித்த முதல் தொடக்கமாகும். சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடானது இலங்கையில் பயணத்தை பாதுகாப்பானதாக மாற்ற உதவியுள்ளது. இது நிறுவனத்தின் ஓட்டுநர்களுக்கான வருவாயையும் அதேபோன்று இலங்கையின் ஸ்டார்ட்-அப்களின் (தொடக்க நிலை வணிக நிறுவனம்) வளர்ச்சியையும் அதிகரித்துள்ளது.
பிக்மியின் தலைமை நிர்வாக அதிகாரி ஜிஃப்ரி குறிப்பிடுகையில் இலங்கையில் கோவிட்-19 பற்றிய கரிசனை முதன்முதலில் தோன்றியபோது, எமது நிறுவனம் “பயணிகள், ஓட்டுநர்கள், சாரதிகள், வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்களுக்கு இது பற்றி அறிவூட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது” என்றார்.
வாடிக்கையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு மிக முக்கியமானதாக இருப்பதால், நேரடி தொடர்பு இல்லாத கட்டண முறையினை அறிமுகப்படுத்துதல் மற்றும் ஓட்டுநர்களை கை சுத்திகரிப்பு திரவம் மற்றும் முகக்கவசம் என்பவற்றினை பயன்படுத்தல் போன்ற பல தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தவும் நிறுவனம் உடனடி நடவடிக்கை எடுத்தது.
"எங்கள் முழு அமைப்பையும் #சேப்டிபிரஸ்ட் (#safetyfirst) என்ற கருப்பொருளை அடிப்படியாக கொண்டு ஒன்று திரட்டினோம், அங்கு எங்கள் ஊழியர்கள், ஓட்டுநர்கள் மற்றும் வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதில் அதிகாரிகள் வழங்கிய நெறிமுறைகள் மற்றும் நடவடிக்கைகளை நாங்கள் கடுமையாக பின்பற்றுவதில் கரிசனை செலுத்தினோம்" என்று ஜிஃப்ரி கூறினார்.
அவசரகால விநியோகங்கள் __எந்த நேரத்திலும்
ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் நேரத்திலும் பிக்மீ ஆனது விநியோகத்தினை கிடைக்கச் செய்ய பணியாற்றுகிறது.
மேலும் அவர் கூறுகையில் "எங்கள் தொழில்நுட்பம் மற்றும் சிறந்த உள்கட்டமைப்பு எம்மிடம் இருப்பதால் வாடிக்கையாளர்கள் வெளியே செல்வதை தடுத்து வாடிக்கையாளர்களுக்கு பொருட்களைப் பெறுவதற்கான சிறந்த தீர்வை நாட்டிற்கு வழங்க முடியும் என்பதை நாங்கள் அறிவோம். அரசாங்கத்தின் உதவியுடன் அத்தியாவசிய பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு தினசரி அடிப்படையில் வழங்கப்படுவதை உறுதிசெய்ய முடியும், ”என்றார்.
ஊரடங்கு உத்தரவின் போது வாகனம் ஓட்டுவது ஆபத்துகளைக் கொண்டுள்ளது. ஆனால் பிக்மீ ஆனது உள்ளூர் போலீஸ் நிலையங்களுடன் இணைந்து தங்கள் ஓட்டுநர்களுக்கு தேவையான அனுமதியினை பெற்றுக்கொடுக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் ஆதரவை வழங்குவதற்காக, நிறுவனம் அவசரகால தொடர்பொன்றினை (ஹோட்லயின்) அறிமுகப்படுத்தியது, இது வீட்டிலிருந்து பணிபுரியும் நபர்களால் செயற்படுத்தப்படுகிறது.
ஊரடங்குச் சட்ட நேரத்தின் பேர்து விநியோகங்களை மேற்கொள்வதனை அரசாங்கத்தின் உதவியுடன், PickMe ஆரம்பத்துள்ளது.
அதன் குறுகிய கால வரலாற்றிலே பிக்மீ ஆனது நெருக்கடிகளுக்கு பதிலளிப்பதில் சுறுசுறுப்பாக செயல்பட்டு சாதனை புரிந்துள்ளது.. 2017 ஆம் ஆண்டு வெள்ளத்தின் போது, அவர்கள் படகுகளை அணிதிரட்டுவதன் மூலம் மீட்பு முயற்சிகளில் இராணுவத்திற்கு உதவ தங்கள் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தினர்.
மேலும் ஜிஃப்ரி குறிப்பிடுகையில் "எங்கள் தற்போதைய முன்னுரிமையானது அத்தியாவசிய பொருட்களை நியாயமான விலையில் வழங்குவதன் மூலம் நமது நாட்டு மக்களின் பொருளாதார மற்றும் சமூக கஷ்டங்களை எளிதாக்குவதோடு, இந்த மோசமான சூழ்நிலையில் நாட்டிற்கு உதவ முன்வந்த நமது சக ஓட்டுநர்கள் மற்றும் சாரதிகளின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதாகும் " என்றார்.
இலங்கையின் மிகப்பெரிய தொலைதொடர்பு சேவை வழங்குநரால் கையகப்படுத்தப்பட்ட ஆன்லைன் ஷாப்பிங் போர்ட்டலான தனது முந்தைய வணிகத்திலிருந்து இருந்து வெளியேறிய பின்னர் ஜிஃப்ரி பிக்மீயை நிறுவினார். பிக்மீயானது அவரது சொந்த சேமிப்பு மற்றும் வேறு சில முதலீட்டாளர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட மொத்த பணமாக 2 மில்லியன் அமெரிக்க டொலருடன் தொடங்கப்பட்டது. "தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய ஒரு வணிகத்தில் இறங்க எனக்கு ஒரு தயக்கம் இருந்தது," என்று அவர் கூறினார். "ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, டாக்ஸி வணிகத்தில் எந்த தொழில்நுட்பமும் இருக்கவில்லை எனவே ஒரு பெரிய வாய்ப்பு இருப்பதாகத் தோன்றியது."என்றும் மேலும் கூறினார்.
கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டுள்ள உலகைக் கையாள்வதில் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி இப்போது அவர் ஆச்சரியப்படுகிறார்.
"எங்கள் நாடு மட்டுமல்ல, உலகம் முழுவதுமே வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும், அவர்களின் அன்றாட வாழ்க்கை எவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளது என்பதையும் நாங்கள் காண்கிறோம், தொழிநுட்பமானது மக்களுக்கு சில நம்பிக்கையை ஏற்படுத்துவதிலும் மற்றும் இந்த கடினமான காலங்களில் அவர்களின் தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்ய உதவுவதிலும் இது எவ்வாறு பங்களிக்கிறது என்பதைப் பற்றி நான் வியப்படைகிறேன் ”என்றும் ஜிஃப்ரி கூறினார்.
"இது ஒரு புதிய பொருளாதாரம் உருவாகி வருவதை உலகம் காணக்கூடும், மற்றும் அதனுடைய தொழில்நுட்பமும் மனிதர்களின் குணங்களும் எல்லைகளை தக்கவைத்துக்கொள்தல் என்பனவும் ஒரு புதிய பொருளாதாரத்தையும் புதிய வாழ்க்கை முறையையும் வெளிப்படுத்த உதவும் இது சாத்தியமான ஒன்றாகும்'' என்று குறிப்பிட்டார்
2020 இல் ஏப்ரலில் பிரசுரிக்கப்பட்டது.